ICC விருதுகளை அள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்…!

ICC விருதுகளை அள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்…!

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, ஆடவர் பிரிவில் ஐசிசி யின் ஆண்டின் சிறந்த வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை வெற்றிகொண்டுள்ளார்.

2021 ம் ஆண்டில் மொத்தமாக 36 சர்வதேச போட்டிகளில் 22.20 சராசரியில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவர் 21 டி20 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அவரது டெத் பவுலிங் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை நல்கியது எனலாம்.

அஃப்ரிடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 17.06 சராசரியில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேநேரம் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார். அவரைத் தொடர்ந்து ஐசிசியின் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் ஆசாம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் பாகிஸ்தானிய வீரர்கள் மூவர் ICC யின் முக்கிய விருதுகள் மூன்றை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICC யால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள், டெஸ்ட், T20 போட்டிகளுக்கான உலக அணிகளின் பட்டியலில் பாகிஸ்தான் மொத்தம் 8 இடங்களை தனதாக்கியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.