ICC விருதை வெல்லப்போகும் இலங்கையின் இளம் வீரர்..!

சர்வதேச கிரிக்கெட் பேரவை அண்மைக்காலமாக ஓவொரு மாதத்திலும் சிறப்பாக கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கான விருதுகளை வெளியிட்டு வருகின்றது.

அதன்படி முதலாவதாக அறிவிக்கப்பட்ட விருதை ரிஷாப் பாண்ட், அடுத்து அஷ்வின், அடுத்து பாபர் அசாம் ஆகியோர் வெற்றி கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

 

அதற்கான குறும் பட்டியலில் (short List) இலங்கையின் இளம் சுழல் பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்கிரமாவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரோடு பாகிஸ்தானின் ஹசன் அலி, பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அந்த போட்டியில் 11 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பிரவீன் ஜெயவிக்கிரம வெற்றிபெற எங்கள் வாழ்த்துக்களும்.

https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month