ICC உயரிய கௌரவம் பெற்ற இலங்கை அணித்தலைவர் வெல்லாலகே …!

 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்புமிக்க வீரர்களை கொண்டு, பெயரிடப்பட்டுள்ள அணியின் பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவர் யாஷ் துல் தலைமையிலான அணியில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 12 வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்தப் பெறுமதிமிக்க அணியில், உலக கிண்ணத்தை வென்ற இந்திய இளையோர் அணியின் மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், 12 வீரர்களில் இலங்கை இளையோர் அணியின் தலைவர் துனித் வெல்லாலகேவும் உள்ளடங்கியுள்ளார்.

உலகக் கிண்ணப் தொடரின்போது, துனித் தலைராகவும் சகல துறைவீரராகவும் சிறந்து விளங்கினார். இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரரானார்.

துடுப்பாட்ட வீரராக அவர் 6 போட்டிகளில் 264 ஓட்டங்களை பெற்றதுடன் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் 7 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

dailynews