ICC உலக கிண்ணம் 2023- அரையிறுதி அணிகள் உறுதியாகின..!

2023 ஒருநாள் உலகக் கிண்ண தொடரானது தற்போது அரையிறுதி சுற்றை நெருங்கியுள்ளது.

10 அணிகள் போட்டியிட்ட இந்த தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பெரும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும்.

அந்தவகையில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ள அணிகளாக இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

இப்போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது

இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 16 ஆம் திகதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

✍️ C G prashanthan

Previous articleஉலகக்கோப்பை கிரிக்கெட் : அரையிறுதி சுற்றுக்குள் நுழைய போராடும் 6 அணிகள்..!
Next articleICC cricket Worldcup- வரலாற்று சாதனை படைத்தது..!