ICC மகளிர் உலக்கோப்பை போட்டியை நடத்துகிறது இலங்கை..!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், எதிர்வரும் இரண்டு டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 2023 மற்றும் 2025ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் கோவிட் பாதிப்பு காரணமாக சவுத்தாம்ப்டனில் போட்டி நடைபெற்றது.
மேலும், அடுத்த 4 ஆண்டுகளில் மகளிர் ஐசிசி போட்டிகள் நடைபெறும் நாடுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி, 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை போட்டியை நடத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2013க்குப் பிறகு இந்தியா மகளிர் உலகக் கோப்பையை நடத்துவது தனிச்சிறப்பு.
மேலும், 2024 மற்றும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பை வங்கதேசம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெறவுள்ள மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத்தை இலங்கை வென்றுள்ளது.
டி20 முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 6 அணிகள் விளையாட உள்ளன. ஆனால், இலங்கை அணி போட்டிக்கு தகுதி பெறத் தவறினால், போட்டி நடத்தும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் கருதப்படுகிறது.