எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெற ஏற்பாடகியுள்ள உலக கிண்ண போட்டிகளுக்கான பயிற்சி போட்டிகளின் நேர அட்டவணையை சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் குவாதி, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் இந்த பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி போட்டிகளில் இலங்கை அணி செப்டம்பர் 29ஆம் திகதி பங்களாதேஷ் அணியோடும் ஒக்டோபர் 03ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியோடும் விளையாட உள்ளது. இந்த 2 போட்டிகளும் குவாதி நகரில் அமைந்துள்ள பர்ஸபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு அட்டவணை
செப்டம்பர் 29
பங்களாதேஷ் எதிர் இலங்கை – குவாதி
தென்னாப்பிரிக்கா எதிர் ஆப்கானிஸ்தான் – திருவனந்தபுரம்
நியூசிலாந்து எதிர் பாகிஸ்தான் – ஹைதராபாத்
செப்டம்பர் 30
இந்தியா எதிர் இங்கிலாந்து – குவாதி
அவுஸ்ரேலியா எதிர் நெதர்லாந்து – திருவனந்தபுரம்
ஒக்டோபர் 02
இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் – குவாதி
நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா – திருவனந்தபுரம்
3 ஒக்டோபர்
ஆப்கானிஸ்தான் எதிர் இலங்கை – குவாதி
இந்தியா எதிர் நெதர்லாந்து – திருவனந்தபுரம்
பாகிஸ்தான் எதிர் அவுஸ்ரேலியா – ஹைதராபாத்
✍️ C G Prashanthan