ICC Worldcup cup 2023-இந்தியாவின் உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் இதுதான்… BCCI செய்த தவறு

இந்தியாவின் உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த வார்னர்.. பிசிசிஐ செய்த தவறு

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் பிட்ச்சை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றியது தான் என்ற விமர்சனம் உள்ளது.

ஆனால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரரான டேவிட் வார்னர் தங்கள் அணி இறுதிப் போட்டியில் எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதன்படி பார்க்கும்போது உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்தியது தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என தெரியவந்துள்ளது. அந்த முடிவை எடுத்தது பிசிசிஐ தான் என்பதால் இந்திய அணியின் தோல்விக்கு பிசிசிஐ தான் காரணம்.

அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த ஆஸ்திரேலியா மிக எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணி மிக எளிதான ஒரு திட்டத்தை முன்வைத்து வெற்றி பெற்றதாக தற்போது டேவிட் வார்னர் கூறி இருக்கிறார்.

அதாவது அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடியதால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய அணியில் உள்ள பிட்ச்களை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது என அவர் கூறினார். அதனால் பிட்ச்
எவ்வாறாக இருந்தாலும் அதை சமாளித்து ஆடும் திறன் ஆஸ்திரேலிய அணிக்கு இருப்பதாக அவர் கூறினார்.

அடுத்து இந்த இறுதிப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தின் பவுண்டரி எல்லை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தின் பவுண்டரி எல்லைகளைப் போன்றே, அதே அளவுக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் எப்படி ஆடுவோமோ அதேபோல் இங்கேயும் ஆட தாங்கள் திட்டமிட்டதாக குறிப்பிட்டார் வார்னர்

அந்த திட்டத்தின்படி பந்து வீசும் போது ஷார்ட் லென்த் பந்துகளை அதிகம் வீச வேண்டும், பேட்டிங் செய்யும்போது அதிக தூரம் கொண்ட பவுண்டரி எல்லைகளை நோக்கி பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓட வேண்டும். இவ்வாறு தாங்கள் திட்டமிட்டு அதைப் போட்டியில் செயல்படுத்து வெற்றி பெற்றதாக டேவிட் வார்னர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் பிசிசிஐ செய்த மிகப்பெரிய தவறு உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போன் கிரிக்கெட் மைதானம் இருந்தது. அங்கு ஒரு லட்சம் ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை பார்க்கும் வசதி உள்ளது. அதைவிட மிகப்பெரிய மைதானத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்ட பிசிசிஐ அகமதாபாத்தில் 1,32,000 பேர் அமரும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமைத்தது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முன்மாதிரியாக வைத்தே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டது. அப்படி என்றால் அந்த மைதானம் ஆஸ்திரேலிய அணிக்கு பழக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும் என்பதை மறந்து அந்த மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகவே உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இருந்தே கருதப்பட்டது. இந்த நிலையில் பிசிசிஐ மும்பை வான்கடே மைதானத்தை இறுதிப் போட்டிக்கான மைதானமாக தேர்வு செய்திருக்கலாம். அங்கு தான் இந்தியா 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்றது.

அதை செய்யாமல் தங்களின் பெருமையை காட்ட வேண்டும் என்பதற்காக உலகின் பெரிய மைதானத்தில் தான் இறுதிப்போட்டியில் நடத்துவோம் என வலுக்கட்டாயமாக அகமதாபாத் மைதானத்தை தேர்வு செய்து இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணிக்கு பழக்கமான சூழ்நிலையில் இறுதிப் போட்டியில் நடத்தி இருக்கிறது பிசிசிஐ. அதனாலயே இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இருக்கிறது.