Impact player தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட ரோகித்..!

இம்பாக்ட் பிளேயர் விதியில் நான் அதிகம் ஈர்க்கப்படவில்லை. இது ஆல்ரவுண்ட் வீரராக மாறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடும் விளையாட்டு, 12 பேர் விளையாடும் ஆட்டம் அல்ல என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

ரசிகர்கள் ரசிப்பது நல்லது, ஆனால் கிரிக்கெட் பார்வையில், ஷிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற அதிரடி வீரர்கள் பந்துவீசப் போவதில்லை என்று நான் உணர்கிறேன், இது இந்தியாவுக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.

ரோஹித் கூறுகையில், இந்த விதியால் இந்திய ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது, வாஷிங்டன் சுந்தர் போன்ற கிரிக்கெட் வீரரை அணிக்கு தேர்வு செய்யும் வாய்ப்பு குறைவு, பேட்டிங்கில் கவனம் செலுத்தினாலும் ஷிவம் துபே பந்துவீச மாட்டார் என்றும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.