மேட்ச் கையை விட்டு போயிருச்சுன்னு நினைக்கிறாங்க. அதுதான் இல்லை. இன்னமும் போட்டியில் இரு அணிகளுக்கும் சரிசமமான வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
இந்தியா தற்போது 164/5 என்ற நிலையில் உள்ளது. இதில் ரோஹித், கோலி ,ஆகாஷ் தீப் ஆகிய மூன்று பேரின் விக்கெட்டுகளும் அடக்கம். இந்தியாவை பொறுத்தவரை இந்த தொடரில் இம்மூவரின் பங்களிப்பை நம்பி நம் அணி இல்லை. மற்ற இருவரான ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட் மட்டும் தான் நம்முடைய இழப்பு. அதிலும் ஜெய்ஸ்வால் 81 ரன்களும், ராகுல் 24 ரன்களும் என இருவரும் சேர்ந்து 105ரன்களை அணிக்காக கொடுத்து அவர்களின் வேலையை 80% முடித்துவிட்டு தான் சென்றிருக்கிறார்கள்.
இன்னும் இந்தியா 310ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரிசப் பண்ட், ஜடேஜா, வாசிங்டன், நிதிஷ்குமார் ஆகிய நான்கு பேட்டர்கள் இருக்கிறார்கள். நான்கு பேருமே தலா 40ரன்கள் ஆடித்தரக்கூடிய தரமான பேட்டர்கள் தான். நிதிஷ்குமார் இந்த தொடரில் ஏற்கனவே நான்கு முறை 40+ ரன்களை அடித்து கொடுத்திருக்கிறார். ஐடேஜா ஆடிய ஒரே ஒரு போட்டியிலும் 70+ ரன்களை அடித்துள்ளார். வாசிங்டன் சுந்தர் அதிக சான்ஸ் கிடைக்கவில்லையென்றாலும் சிறந்த தடுப்பாட்ட வீரர் என்பதை ஆஸ்திரேலியாவில் நிரூபித்தவர்.
ஆஸி அணியில் ட்ராவிஸ் ஹெட் மாதிரி இந்திய அணிக்கு ரிசப் பண்ட். இன்னும் இந்த தொடரில் பெரிய இன்னிங்க்ஸ் வரவில்லை. இந்த போட்டியில் அதை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
ஆக நான்கு பேரில் இருவர் 30+ ரன்களும், இருவர் அரைசதம் அடித்து பங்களிப்பு செய்வது பெரிய காரியம் ஒன்றும் இல்லை. நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் ரிசப் பண்ட் & ஜடேஜா முழுமையாக ஆடிக்கொடுத்தால் மற்ற எல்லாம் எதிர்பார்த்தப்படி தானாகவே நடக்கும். மூன்றாம் செசன் பாதி வரை இந்திய அணி தாக்குப்பிடித்தால் 380-400 ரன்கள் வரை உறுதி. 60-80ரன்கள் ஆஸியை விட நாம் பின்தங்கிய நிலையில் இருப்போம்.
எதிர்பார்த்தது போல் இது நடந்தால் இந்த சிறிய பின்தங்கிய நிலையை இரண்டாம் இன்னிங்சில் இந்தியா சரிசெய்து கண்டிப்பாக வெற்றிப்பெறும் என்பது என் நம்பிக்கை. இந்த போட்டி மொத்தமும் தற்போது இந்த நான்கு பேர் கைகளில் தான் இருக்கிறது. ஆளுக்கு தலா 60-80பந்துகளை எதிர்கொண்டாலே மேட்ச் நம்ம பக்கம். #RishabhPant #ravindrajadeja #WashingtonSundar #nithishkumarreddy
#bordergavaskartrophy2024
#Ashwin