#INDvENG- போட்டியில் இரு அணிவீரர்களும் ரெட் கேப் அணிய காரணம் என்ன தெரியுமா❓❓
நேற்று 2-வது நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் வீரர்கள், போட்டி வர்ணனையாளர்கள், நடுவர்கள் என அனைவருமே சிகப்பு நிற தொப்பியை அணிந்து மைதானத்திற்கு வந்தனர். வழக்கமாக தாங்கள் அணியும் தொப்பியை தவிர்த்து இதுபோன்ற ரெட் தொப்பியை அணிந்து வர காரணம் என்ன என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழத் துவங்கின.
இந்நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி அந்த விவரம் யாதெனில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரு ஸ்டார்ஸ் மனைவி ரூத் ஸ்டார்ஸ் நுரையீரல் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அவரின் நினைவாக தற்போது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கேன்சர் பவுண்டேஷன் உருவாக்கி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையிலும், மரியாதை கொடுக்கும் வகையிலுமே நேற்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் சிவப்பு நிற தொப்பியை அணிந்து விளையாட முடிவு எடுத்தனர். இதில் இந்திய வீரர்களும் பங்கேற்றது மிகச்சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
#ABDH