இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
முதல் போட்டி 5 ம் திகதியும் 2 வது போட்டி பெப்ரவரி 13 ம் திகதியும் சென்னையில் ஆரம்பிக்கவுள்ளது.
கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் 2 வது போட்டி சென்னையில் இடம்பெறும்போது 50 வீதமான ரசிகர்களுக்கு போட்டியை பார்க்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.