இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம் பெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்துக்கொண்டிருக்கிறது .
இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் ஐந்தாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து கொடுத்து இங்கிலாந்துக்கு அதீத நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றார் எனலாம்.
சென்னை மைதானம் உங்களுக்கு தெரியும் எப்போதும் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதீத சாதகத்தை கொடுக்கவல்லது, ஆனால் இப்போது இந்த போட்டி இடம்பெறும் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு எள்ளளவும் ஒத்துழைக்கவில்லை என்பதே கவலையானது.
சென்னை மைந்தர்கள் அஷ்வின், சுந்தர் இருவராலும் கூட ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு இங்கிலாந்து வளைத்து வளைத்து இந்திய பந்துவீச்சை தெறிக்க விட்டது.
இப்போதைய இங்கிலாந்து அணி சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ளத்தக்க ஒரு பலமான அணி என்பது முக்கியமானது.
அந்த அணியின் ஆரம்ப வீரர் சிப்லி, அணித்தலைவர் ஜோ ரூட், பென் ஸ்டொக்ஸ் , 3 வது போட்டிக்கு திரும்ப இருக்கும் பெயர்ஸ்டோவ் மற்றும் இந்த போட்டியில் விக்கெட் காப்பாளராக விளையாடும் பட்லர் என்று எல்லோரும் சுழல் பந்தை லாவகமாக சந்திக்கவல்லவர்கள்.
அதனை இந்த போட்டியில் வலுவாக இங்கிலாந்து காண்பித்துக் கொண்டிருக்கிறது.
2 நாட்கள் கடந்தும் இந்திய பந்து வீச்சால் இங்கிலாந்தை வீழ்த்த முடியாதிருக்கின்றமை இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகம்தான்.
இங்கிலாந்து இன்றைய நாள் நிறைவுக்கு வரும்வரை 8 விக்கெட்களை இழந்து 555 ஓட்டங்களைப் பெற்றது.
*100 வது டெஸ்ட் போட்டி.
*20 வது சதம், அதனை 5 வது இரட்டை சதமாக்கினார்.
*100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை (218 ) எனும் சாதனையையும் இன்றைய இரட்டை சதத்தின் மூலம் ஜோ ரூட் தனதாக்கினார் .
*கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் 2 இரட்டை சதம் ,1 சதத்தையும் பெற்று கொண்டுள்ளமையும் சிறப்பம்சமாகும் .
*ரூட்-விராட் கோஹ்லி தலைவராக செயல்படும் 57 டெஸ்ட்டில் அவரது தலைமைத்துவத்தில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்.
*ரூட்-விராட் கோஹ்லி தலைவராக செயல்படும் 57 டெஸ்ட்டில் அவரது தலைமைத்துவத்தில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்.
*பிரண்டன் மக்கலம் நியூசிலாந்தின் வேலின்க்தான் மைதானத்தில் வைத்து 2013/14 பருவகாலத்தில் பெற்றுக்கொண்ட 302 ஓட்டங்களுக்கு பின்னர் இந்தியாவுக்கு எதிராக பெறப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்.
*2010/11 ம் ஆண்டு பருவகாலத்தில் நியூசிலாந்தின் பிரண்டன் மக்கலம்
ஹைதெராபாத் மைதானத்தில் பெற்றுக்கொண்ட 225 ஓட்டங்களுக்கு பின்னர் ஒரு வெளிநாட்டு துடுப்பாட்ட வீரர் இந்தியாவில் பெற்றுக்கொண்ட இரட்டை சதமாகவும் ரூட்டின் இன்றைய இரட்டை சதம் பதிவானது.
*தொடர்ந்து மூன்று போட்டிகளில், அடுத்தடுத்து, 150-க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த ஏழாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை ரூட் அடித்த 20 சதங்களில், பத்து சந்தர்ப்பங்களில் அதனை 150க்கும் மேற்பட்டதாகவும் , 5 சந்தர்ப்பங்களில் இரட்டை சதமாகவும் மாற்றியுள்ளார் ரூட்.
*இதைவிடவும் ஆசிய மைதானங்களில் அதிக இரட்டை சதம் விளாசப்பட்ட மைதானமாக இந்தியாவின் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் சாதனை படைத்துள்ளது .
சென்னை மைதானத்தில் இதுவரைக்கும் பத்து இரட்டைச் சதங்கள் விளாசப்பட்டுள்ளன .
அதிக இரட்டைச் சதம் பெறப்பட்ட ஆசிய மைதானங்கள்
10 – சென்னை*
10 – லாஹூர்
9 – கொழும்பு SSC
8 – காலி
7 – டெல்லி
7 – கராச்சி
இந்திய பந்து வீச்சு.
இந்திய பந்து வீச்சு பெருமளவில் எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை, இஷாந்த் சர்மா, பூம்ரா, அஷ்வின், நதீம் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
அதுவும் நதீம் மற்றும் வோஷிங்டன் சுந்தர் ஆகியோரது பந்துவீச்சை எளிதாக இங்கிலாந்து எதிர்கொண்டு இலகுவாக ஓட்டங்களைக் குவித்துள்ளது..
நாளை போட்டியின் 3 ம் நாளில் இந்திய துடுப்பாடும்.
இங்கிலாந்துக்கே இவ்வளவு ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் இந்தியாவின் துடுப்பாட்டம் எப்படி இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை.
ஆகவே மைதானம் 4 ம் ,5 ம் நாட்களில் சுழல் பந்துவீச்சுக்கு அதீத சாதகத்தை கொடுக்கவல்லது, ஆகவே அதனை கவனத்தில் கொண்டு இந்தியா நாளைய நாளில் ஓட்டங்களை அதிகமாக குவிப்பது அவசியமானது.
எது எவ்வாறாயினும் அதிகப்படியான வாய்ப்புக்கள் போட்டி Draw இல் முடியவே வாய்ப்பிருக்கிறது.
காத்திருந்து பார்க்கலாம் ,நாளைய நாள் போட்டியின் போக்கை தீர்மானிக்கவல்லதாக அமையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.