இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் 400 ஓட்டங்கள் கடந்தும் என் ஆட்டத்தை நிறுத்தி இந்தியாவை துடுப்பாட பணிக்காமல் ஆட்டத்தை இழுத்தடித்து என்ற விமர்சனகள எழுந்தன.
டிக்ளேர் செய்யாமல் இன்னிங்ஸை இழுத்ததற்கு விளக்கம் அளித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜான் லூயிஸ்.
முதல் இன்னிங்சில் 241 ஓட்டங்கள் முன்னிலையொடு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து, தேனீர்பான இடைவேளைவரை பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெற்றி இலக்கு 400 ஓட்டங்கள் தாண்டியும், டிக்ளேர் செய்யாமல் All out ஆகும்வரை விளையாடியது விமர்சனங்களை எழுப்பியது.
இந்தியா மிகச்சிறந்த வீரர்களைக் கொண்ட அணி. அதனால்தான் நாங்களாக இந்தியாவுக்கு எந்த வெற்றி வாய்ப்பையும் உருவாக்கிவிடாமல் எவ்வளவு ஓட்டங்கள் சேர்க்கமுடியுமோ அவ்வளவு ஓட்டங்களை சேர்த்தோம் என்று பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார் லூயிஸ்
இந்தியாவுக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நான்காது நாள் ஆட்டத்தை 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என முடித்திருக்கிறது இந்தியா.
ஆகமொத்தத்தில் அவுஸ்திரேலியாவில் சிட்னி, பிரிஸ்பேன் போட்டிகள் இங்கிலாந்துக்கு ஒருவித பயத்தை உருவாக்கியிருக்கலாம்.
நாளை போட்டியை தீர்மானிக்கும் 5 ம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.