#INDvENG 5 வது போட்டிக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு..!

இந்திய ,இங்கிலாந்து அணிகள் இடையில் தரம்சாலா மைதானத்தில் இடம்பெறவுள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட பூம்ரா மீண்டும் அணிக்கு திரும்பிருக்கிறார்,ராகுல் உபாதை காரணமாக ஐந்தாவது போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ச்சியாக அணியில் இடம் பிடித்திருந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ரஞ்சி கிண்ண போட்டிகளில் தமிழக அணிக்காக அரையிறுதி ஆட்டத்தில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.