#INDvENG _இங்கிலாந்தை நிலை குலையச் செய்த இந்திய பந்து வீச்சை படை,  ஆதிக்கத்துடன் ஆட்டத்தை முடித்தது..!

இங்கிலாந்தை நிலை குலையச் செய்த இந்திய பந்து வீச்சை படை,  ஆதிக்கத்துடன் ஆட்டத்தை முடித்தது..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் வெளியிட்டார்.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 183 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக அபாரமான முறையில் இன்று பந்துவீசியமையே இங்கிலாந்தின் சரிவுக்கு காரணமானது.

அஸ்வின் இல்லாது இன்று இந்தியா களமிறங்கியது, ஷர்துல் தாஹூருக்கு இன்று வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே பறித்தமை கவனிக்கத்தக்கது. 138 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் இருந்த இங்கிலாந்து,  183 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பூம்ரா 4 விக்கட்டுக்களையும், சாமி 3 விக்கெட்டுகளையும், தாஹூர் 2 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலளித்து இன்றைய முதல் நாள் நிறைவில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இன்றைய நாள் ஆட்ட நிறைவில் போது விக்கட் இழப்பின்றி 23 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்திய பந்துவீச்சு மூலமாக இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தியிருக்கும் நிலையில், நாளை துடுப்பாட்டத்தில் அதிகமாக சாதித்தால் இந்த போட்டியில் இன்னும் அழுத்தத்தை இங்கிலாந்துக்கு கொடுக்கும்  என நம்பப்படுகிறது.

INDvENG