#INDvENG_அஹமதாபாத் மைதானத்துக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது.-யாருடைய பெயர் தெரியுமா?
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இன்றைய 3 வது டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ள அஹமதாபாத் மைதானம் இன்று முதல் புதிய பெயரால் அழைக்கப்படவுள்ளது.
சர்தார் பட்டேல் மைதானம் என்று அழைக்கப்பட்ட இந்த மைதானம் இன்று முதல் நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட மைதானங்களுள் அழகிய தோற்றப் பொலிவும், அதிக ரசிகர்கள் போட்டியைப் பார்க்கத்தக்க விதத்திலும் இந்த மைதானம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில் 1 லட்சத்து10 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
800 கோடி இந்திய ரூபாய் செலவில் கட்டி முடித்துள்ள இந்த மைதானம் உலகின் மிகச்சிறந்த மற்றும் பெரிய கிரிக்கெட் மைதானம் எனும் பெயரை பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் உள்ள நிலையில் அந்த பெருமையை அஹமதாபாத் மோட்டேரா நரேந்திரமோடி மைதானம் பெற்றுள்ளது.