#INDvENG_இங்கிலாந்து அணியில் இரு வீரர்கள் நீக்கம் -டேவிட் மாலன் அணிக்கு அழைப்பு..!

இங்கிலாந்து அணியில் இரு வீரர்கள் நீக்கம் -டேவிட் மாலன் அணிக்கு அழைப்பு..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி வருகிற 25ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இந்திய அணி லோர்ட்ஸ் போட்டியை வெற்றிகொண்டு 1_0 என முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் மீதமான 3 போட்டிகளுக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

டொம் சிப்லி , சாக் கிரவ்லி ஆகிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர், டேவிட் மலான் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளமை கவனிக்கத்தக்கது.

இதன் காரணத்தால் ஆரம்ப வீர்ர்களாக ரோரி பேர்ன்ஸ், ஹசீப் ஹமீட் விளையாட, மூன்றாவது இடத்தில் டேவிட் மலான் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அணி விபரம் ????

ஜோ ரூட் (Captain), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஹசீப் ஹமீட், டான் லாரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், மார்க் வூட்.