ஓவல் மைதானத்தில் துரத்தியடிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை எது தெரியுமா ?
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தாலும் இங்கிலாந்தை 290 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.
99 ஓட்டங்களால் பின் நிலையில் இருந்த இந்திய அணி புஜாரா ,ரோகித் சர்மா ராகுல் ஆகியோரின் அற்புதமான துடுப்பாட்டத்தின் துணையோடு மூன்றாம் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றுள்ளது .
இங்கிலாந்தை விடவும் இப்போது 171 ஓட்டங்களால் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது, இந்த ஓவல் மைதானத்தில் 4வது இன்னிங்சில் 250க்கும் மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையை துரத்தி அடித்து வெற்றி பெற்ற வரலாறுகள் இரண்டு மட்டுமே காணப்படுகின்றன.
ஆகவே இந்திய அணி 250 முதல் 300 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தால் வெற்றி வாய்ப்புகள் ஏற்படலாம் எனவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
1902 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 263 ஓட்டங்களை பெற்று 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கட்களை மட்டும் இழந்து 255 ஓட்டங்களை துரத்தியடித்து 1963 ல் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Update..?
இந்திய அணி தமது 2 வது இன்னிங்ஸில் 466 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 368 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.