மீண்டும் ஏமாற்றிய கோலி (வீடியோ இணைப்பு)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி துடுப்பாட்டம் மிகப்பெரும் அளவிலேயே பேசுபொருளாக மாறியிருக்கிறது.
50க்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்களாக சதம் எதனையும் பெற்றுக் கொள்ளாத விராட் கோலி, இங்கிலாந்து தொடரில் அந்த சாதனையை நிலைநாட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க மீண்டும் கோலி ஏமாற்றினார்.
52 இன்னிங்ஸ்களாக கோலி எதுவிதமான சதத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது, அனைத்து வகையான போட்டிகளிலும் 71 வது சதத்தை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்க, நீண்ட இடைவெளியை கோலி எடுத்துக்கொள்கிறார்.
இந்த மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்டத்தில் சிறிது சாதகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்று நான்காவது நாளில் மிகமுக்கியமாக கோலியின் ஆட்டம் எதிர்பார்க்கப்பட்டாலும், மொயின் அலியின் பந்துவீச்சில் 44 ஓட்டங்கள் பெற்று ஸ்லிப் திசையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
கோலியை அதிகமான தடவைகள் டெஸ்ட்டில் ஆட்டமிழக்கச் செய்த வீரர்களாக அன்டேர்சன், மற்றும் நாதன் லயன் ஆகியோர் காணப்படுகிறார்கள், 7 தடவைகள் கோலியை டெஸ்ட் போட்டிகளில் ஆட்டமிழக்கச் செய்தனர்.
இன்று கோலியை வீழ்த்தியதன் மூலமாக மொயின் அலி ஆறாவது தடவையாக கோலியை வீழ்த்தியிருக்கிறார்.
வீடியோ இணைப்பு ???
YESSSS Mo! ?
Scorecard/Clips: https://t.co/Kh5KyTSOMS
??????? #ENGvIND ?? pic.twitter.com/Weln0WGC9b
— England Cricket (@englandcricket) September 5, 2021