இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றமான ஆரம்பத்தை மேற்கொண்டுள்ளது .
Lunch க்கு ஆட்டம் நிறுத்தப்படும் வரை இந்திய அணி ஆரம்ப வீரர்கள் இருவரையும் இழந்து 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் Gill 29 ஓட்டங்களும் ரோகித் சர்மா 6 ஓட்டங்களும் ஆச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
முன்னதாக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களால் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது .
இந்திய அணி 519 ஓட்டங்களால் பின் நிலையில் காணப்படுகிறது .ஆடுகளத்தில் புஜாரா 20 ஓட்டங்களையும் விராட் கோலி 6 ஓட்டங்களும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர் .
இரண்டு நாட்கள் முழுவதுமாக களத்தடுப்பு செய்து விட்டு சென்னை வெயிலில் மூன்றாவது நாளில் துடுப்பெடுத்தாடுவது இந்தியாவின் ஆட்டக்காரர்களுக்கு உடற் களைப்பு இருக்கும் என்பது தெரிந்த விஷயம்.
எப்படி இந்த டெஸ்ட் போட்டியை இந்தியா எதிர்கொள்ளப் போகிறது என்று பொறுத்து இருந்து அறிந்து கொள்ளலாம் .
500க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை எதிர் அணிக்கு முதல் இன்னிங்சில் விட்டுக் கொடுத்துவிட்டு இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற சந்தர்ப்பங்கள் மிக அரிது என்பதும் குறிப்பிடத்தக்கது.