இரண்டாவது டெஸ்டில் இரண்டு மாற்றங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் வலியுறுத்தும் லக்ஷ்மன் ..!
இங்கிலாந்து கிரிக்கெட் உலாவி மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் வெற்றி தோல்வியற்ற நிலையில் நிறைவுக்கு வந்தது.
இந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது, இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் இந்திய டெஸ்ட் ஆட்டக்காரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துப்படி முதலாவது போட்டியில் இணைத்துக்கொள்ளப்படாத ரவிச்சந்திரன் அஷ்வின், உபாதை அடைந்துள்ள தாஹூருக்குப் பதிலாக அணியில் இணைக்கப்படவேண்டும்.
இதேபோன்று பூரண உடற்தகுதி பெறாமல் முதல் போட்டியை தவறவிட்ட இசாந்த் சர்மா பூரண உடற் தகுதியை பெற்றிருந்தால் சிராஜிற்கு பதிலாக அணியில் சேர்க்கப் படவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இரண்டு மாற்றங்களுடனும் இந்தியா 2-வது டெஸ்டில் களமிறங்கிய வேண்டும் எனும் கருத்தை லக்ஷ்மன் முன்வைத்துள்ளார்.