#INDvWI_இந்திய தேசிய அணிக்கு திடீரென அழைக்கப்பட்ட தமிழக வீரர்கள் இருவர்..!
இந்திய கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும. இடம் பெறும். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவினுடைய தாக்கம் அதிகரித்த நிலையில் மேலதிகமான வீரர்களையும் அணிக்கு இணைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்திய தேர்வு குழு தள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான அணியில் மேலதிகமான வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வரும் ஷாருக் கான் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் ஆகியோர் இந்திய அணிக்கு மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள் .

ஏற்கனவே தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்துள்ள நிலையில் ,இப்போது ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் .
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த விஜய் சங்கர் தலைமையிலான தமிழகத்தின் ரஞ்சி அணியில் இவர்கள் மூவருக்கும் பதிலாக மாற்று வீரர்கள் இதுவரை இணைக்ப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.