லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் யாழ் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஜயகாந்த் வியாஸ்கந்த்துக்கு இந்த ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
21 வயதான இவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நெட் பவுலராக சேர உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை தங்கள் அணியில் நெட் பவுலராக சேர்க்க ஏற்பாடு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வியாஸ்காந்த் அண்மையில் முடிவடைந்த வங்காளதேச பிரீமியர் லீக்கில் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினர். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதே நேரத்தில் திசர பெரேரா தலைமையில் LPL சாம்பியன் ஆன ஜஃப்னா கிங்ஸ் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக விளையாடிய வியாஸ்காந்த் வளர்ந்து வரும் வீரருக்கான சிறப்பு விருதையும் இம்முறை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
21 வயதான வியாஸ்காந்துக்கு ஐபிஎல் க்குள் நுழைகின்ற இந்த பிரவேசமானது அவருடைய கிரிக்கெட்டின் வாழ்வை திசை திருப்பி போடும் ஒரு சந்தர்ப்பம் என நம்பப்படுகிறது.
எமது YouTube தளத்திற்கு 👇