IPL இறுதிப் போட்டியில் தோனிக்கு தடையா ?

16 வது IPL தொடரின் குஜராத் இன்னிங்ஸின் 16வது ஓவரை வீசுவதற்கு முன் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்ததால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்க மாட்டார் என்றும் தடை விதிக்கப்படலாம் என பல இந்திய செய்தி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்த சீசனில் வீரர்களின் நடத்தையை மீறியதற்காக ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட தோனிக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் கள நடுவர்களுடன் தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆட்டம் 4 நிமிடங்கள் தாமதமானது.

போட்டியின் 16வது ஓவரில் பத்திரன பந்து வீச தயாரானார், ஐபிஎல் விதிகளின்படி எந்த வீரரும் 9 நிமிடத்திற்குள் போட்டியில் களமிறங்க வேண்டும். ஒருவர் 8 நிமிட நேரத்திற்கும் மேலாக மைதானத்திற்கு வெளியே இருந்தால், அவர் மீண்டும் அதே நேரம் களத்தில் இருக்க வேண்டும் அதன்பின்னரே அவர் பந்துவீச அனுமதிக்கப்படுவார்.

அதன்படி, 9 நிமிடங்கள் மைதானத்திற்கு வெளியே இருந்த மத்திஷ 16வது ஓவரை வீச அனுமதிக்காததால் இந்த சம்பவம் நடந்தது.

மதிஷ பந்து வீச வந்தபோது ​​நடுவர்கள் அவரைத் தடுத்து, கேப்டன் தோனியிடம் ஓய்வு இடைவேளைக்குப் பிறகு களத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை முடிக்காதது குறித்து தோனியுடன் உரையாடினார்.

கள நடுவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​தோனி நடுவர்களிடம் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வாதிட்டார், அவர் வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்தினார், இறுதியாக அந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு 16வது ஓவரை மத்திஷ வீசும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்த சம்பவத்தின் காரணமாகவே சில வேளைகளில் தோனிக்கு தடை வரலாம் என்கின்ற செய்திகள் வெளிவருகின்றன, எதுஎவ்வாறாயினும் இதுவரை எது விதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை என்பதும் மகிழ்ச்சிக்குரியது.

எமது YouTube தளத்திற்கு 👇