IPL இல் சங்ககாராவுடன் கைகோர்க்கும் மாலிங்க…!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க IPL போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராகவும் , பந்து வீச்சு ஆலோசகராகவும் செயல்பட்ட மாலிங்க, இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக செயல்படவுள்ளார்.
சங்ககாரா பணிப்பாளராக செயல்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாலிங்கவும் இணையவுள்ளதால் இப்போது இலங்கை ரசிகர்கள் அனைவரது கவனமும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணி மீது திரும்பியுள்ளது.
ஹசரங்க RCB அணியிலும், பானுக ராஜபக்ச பஞ்சாப் அணியிலும், தீக்ஷன சென்னை அணியிலும், துஷ்மந்த சமீர குஜராத் அணியிலும் IPL போட்டிகளில் ஒப்பந்தமாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.