IPL ஏலத்தில் இலங்கை சார்பில் 31 வீரர்கள்-மொத்தமாக 1097 வீரர்கள்.

IPL ஏலத்தில் இலங்கை சார்பில் 31 வீரர்கள்.

2021 ம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் பங்கெடுக்க பதிவு செய்யப்பட்ட வீரர்களின் மொத்த விபரம் வெளியாகியுள்ளது. இதிலே 1097 வீரர்கள் மொத்தமாக IPL ஏலத்துக்காக பதிவு செய்துள்ளனர்.

சர்வதேச போட்டிகளில் அறிமுகம் மேற்கொண்ட 207 வீரர்களும் ,சர்வதேச போட்டிகளில் அறிமுகம் மேற்கொள்ளாத 863 வீரர்களும் கிரிக்கெட் உறுப்பு நாடுகளின் 27 வீரர்களும் இதிலே அடங்குகின்றனர்.

மொத்தமாக IPL ஏலத்தில் 61 வீரர்கள் அணிகளில் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்த வீரர்களின் பட்டியல்.

மேற்கிந்திய தீவுகள் -56
ஆஸ்திரேலியா – 42
தென் ஆப்பிரிக்கா -38
இலங்கை – 31
ஆப்கானிஸ்தான் – 30
நியூசிலாந்து – 29
இங்கிலாந்து – 21
ஐக்கிய அரபு அமீரகம் – 9
நேபாள் – 8
ஸ்காட்லாந்து -7
பங்களாதேஷ் – 5
அமேரிக்கா – 2
ஜிம்பாப்வே – 2
அயர்லாந்து – 2
நெதர்லாந்து -1