IPL கொல்கத்தா அணியின் பலமும் _பலவீனமும் ஓர் பார்வை…!

Kolkata Knight Riders Team Analysis

முதல் நாள்ல அவங்களோட உடனடி தேவையான அடுத்த கேப்டன 12.25 கோடி கொடுத்து எடுத்துக்கிட்டாங்க அடுத்து கம்மின்ஸ்,ரானா,மாவினு அவங்களோட பழைய வீரர்கள எடுத்து ப்ளேயின் 11அ வலுசேர்த்தாங்க, பழைய டீம்ம தக்கவைக்குறதுல கொல்கத்தா அதீத கவனம் செலுத்த ஏறக்குறைய 75% காசு இங்கேயே போயிருச்சு இதனால ஒருசில இடங்களுக்கு சரியான backup இல்லாம இருக்குறத பாக்க முடியுது

கொல்கத்தாக்கு தலைவலியா இருந்த மிடில் ஆர்டர் No.4 positionக்கு ஸ்ரேயாஸ எடுத்தது அருமையான விஷயம் கொல்கத்தாக்கு மீண்டும் திரும்பும் உமேஷ் யாதவ்க்கு பவர்பிளேயில கம்மின்ஸ் ஓட சேர்ந்து கலக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு கடைசி கட்டத்துல துரிதமா வீரர்கள எடுத்தாலும் சரியான backup optionsஆ நபி,சமிக்கா கருணரத்னே,சவுதி ஆகியோர எடுத்தது plus பாயின்ட்

தொடர்ந்து விமர்சனங்கள சந்தித்து வரும் ரகானே மீண்டும் இந்த சீசன்ல ஓப்பனரா களமிறங்க வாய்ப்பு அமையுது அத அவரு சரியா பயன்படுத்தினா மட்டுமே அணியும் அவரும் சிக்கல் இல்லாம இருக்க முடியும், 7.25 கோடிக்கு எடுக்கப்பட்ட மாவி பந்துவீச்சுல அதும் மிடில் மற்றும் இறுதிகட்டத்துல தன்னோட bestஅ தர வேண்டியது அவசியமாகும் அதே மாதிரி சுனில் நரேன் பின்வரிசையில கொல்கத்தாக்கு இந்த முறை கைகொடுக்கனும்னு நா விரும்புறேன்

அலேக்ஸ் ஹேல்ஸ் மாதிரி ஒரு அதிரடி ஒப்பனர் இருந்தும் அவர first choice ஓப்பனரா பயன்படுத்த முடியாத நிலை கொல்கத்தாக்கு இருக்கு, காரணம் ரசல்,நரேன், கம்மின்ஸ் ஆகியோர் உறுதியா playing 11ல இருப்பாங்க கடைசியா இருக்க அந்த ஒரு இடத்துக்கு சாம் பில்லிங்ஸ் தான் ஆடி ஆவனும் காரணம் அவர் first choice Wicket Keeperஆ தேர்வு செய்யப்பட்டு இருக்குறதுனால அவரோட performance பொறுத்து தான் அணி காம்பினேஷன் மாறுமா மாறாதனு சொல்லப்படும்

அனுபவம் உடைய இந்தியன் விக்கெட் கீப்பர் எடுக்காதது ஏமாற்றம் அளிக்குது இன்னோரு அனுபவ இந்திய வேகப்பந்து வீச்சாளர் கொல்கத்தாக்கு இல்லாம போனதும் கொல்கத்தாக்கு drawback

கொல்கத்தா அணி முதல் ப்ளேயங் 11ல அமையும் வீரர்கள அதிகம் நம்பி இருக்கு அதனால அதுல இருக்குறவங்க தங்களோட முழு பங்களிப்பையும் தந்தா மட்டுமே கொல்கத்தா அணி Playoffs தகுதி பெறும்

#hpde