IPL க்காக பாகிஸ்தான் தொடரை இழக்கும் நியூசிலாந்து வீரர்கள்..!

IPL க்காக பாகிஸ்தான் தொடரை இழக்கும் நியூசிலாந்து வீரர்கள்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியூசிலாந்துக்கு எதிரான தனது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடருக்கான முழு அட்டவணையை அண்மையில் வெளியிட்டது.

18 வருட இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுவைதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தொடர் கணிக்கப்படுகின்றது.

ஆயினும் நியூசிலாந்தின் எட்டு முக்கிய வீரர்கள், செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ள இந்திய பிரீமியர் லீக் (IPL) காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இழக்க வாய்ப்புள்ளது.

கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன், டிம் சீஃபர்ட், ஜேம்ஸ் நீஷாம், ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில், மிட்செல் சான்ட்னர் மற்றும் லோக்கி பெர்குசன் போன்றவர்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என அறியவருகின்றது.

3 ஒருநாள் போட்டிகள் , 3 T20 போட்டிகள் கொண்ட
தொடரில் இருந்து வில்லியம்சன் விலகி இருப்பதால், டாம் லாதம் அல்லது டிம் சவுத்தி ஆகியோர் அணிக்கு தலைமை தாங்குவார்கள்.