IPL தொடருக்கு மகளிர் அணிகள்?

பெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் தொடருக்கு மகளிர் அணிகளையும் உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

2023 முதல் மகளிர் அணிகளை இணைத்துக்கொள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை யோசனையொன்றை முன்வைத்துள்ளது

இதன்படி, ஐபிஎல் தொடருக்கு ஆறு மகளிர் அணிகளை இணைத்துக்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தீவிரமாக திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு, மூன்று அணிகள் கொண்ட மகளிர் டி20 சேலஞ்சரை நடத்தும் நடைமுறை தொடரும், இது மே மாத இறுதியில் புனேவில் நடைபெறும் ஐபிஎல் பிளேஆஃப்களின் போது நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Previous articleஇலங்கையின் உதைபந்தாட்ட நட்சத்திரம் வசீம் ரசீக்Kerala FC உடன்!
Next articleஹசன் அலியை கேலிசெய்த டேவிட் வோர்னர் (வீடியோ இணைப்பு)