IPL போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடிவரும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி நாயகனான டி வில்லியர்ஸ் புதிய சாதனை ஒன்றை நேற்றைய போட்டியில் படைத்துள்ளார்.
IPL போட்டிகளில் 5000 ஓட்டங்களைக் கடந்தவர் எனும் சாதனைக்கு சொந்தக்காரரான 6 வது வீரரானார்,
ரெய்னா, கோஹ்லி, ரோகித் சர்மா, டேவிட் வோர்னர் , தவான் ஆகிய வீரர்களை அடுத்து டீ வில்லியர்ஸ் இந்த பட்டியலில் இணைத்துள்ளார்.
அத்துடன் மிக குறைந்த பந்துகளை IPL ல் சந்தித்து இந்த சாதனையைப் படைத்தவராகவும் வில்லியர்ஸ் திகழ்கின்றார்.
அது மாத்திரமல்லாமல் IPL போட்டிகளில் நேற்று பெற்றுக்கொண்ட ஆட்ட நாயகன் விருதுடன் 25 வது ஆட்டநாயகன் விருதையும் டீ வில்லியர்ஸ் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்றவர்கள் விபரம்.
25: டீ வில்லியர்ஸ் *
22: கெயில்
18: ரோஹித்
17: வோர்னர்
17: டோனி