இந்திய வீர்ர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆஸ்திரேலிய வீர்ர் டேவிட் வார்னர் ஆகியோர் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலத்தில் பாரிய தொகைக்கு ஏலம்போகும் வாய்பபு காணப்படுகின்றது.
1,200 க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களை ஏலத்துக்கு பதிவு செய்துள்ளதால், டாப் டிராக்களாக பலர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் வீரர்களின் பதிவு ஜனவரி 20, 2022 அன்று நிறைவடைந்தது. மொத்தம் 1,214 வீரர்கள் (896 இந்திய மற்றும் 318 வெளிநாட்டு வீரர்கள்) ஐபிஎல் 2022 வீரர்கள் ஏலத்தின் ஒரு பகுதியாக பதிவு செய்துள்ளனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மெகா ஏலத்தில் உலக கிரிக்கெட்டில் உள்ள சில சிறந்த திறமையாளர்களை 10 அணிகள் ஏலம் எடுக்கவுள்ளன.
2022 ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யாத பெரிய நட்சத்திர வீர்ர்களின் பெயர்கள் ?
பென் ஸ்டோக்ஸ்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
மிட்செல் ஸ்ட்ராக்
சாம் கர்ரன்
கிறிஸ் கெய்ல்.