IPL ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் -முன்னணி வீர்ருக்கு உபாதை..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான நாதன் கவுல்டர்-நைல் காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீர்ரான நாதன் கவுல்டர்-நைல்ரா ஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதலாவது போட்டியில் விளையாடினார், ஆயினும் அதன் பின்னரான இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி சார்பில் விளையாடி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவருக்கு உபாதை ஏற்பட்டிருப்பதாகவும் தொடரும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது போகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 ஆட்டங்களில் 2 ல் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது ,நேற்று இடம்பெற்ற ஆர்சிபி அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் முதல் தோல்வியை தழுவிக் கொண்டது.

Previous articleபங்களாதேசிலிருந்து குசல் மெண்டிசுக்கான அழைப்பு..!
Next articleஇந்திய அணிக்கு கார்த்திக் திரும்புவார்- வலுக்கும் நம்பிக்கை…!