IPL வரலாற்றில் அதிக தொகைக்கு சென்னை அணி ஏலம் எடுத்த வீரர் யார் தெரியுமா ?
IPL வரலாற்றில் வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மிகப்பெரிய தொகையை எந்தவொரு வீரருக்காகவும் விரையம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவரும் அந்த அணி, கடந்த ஆண்டு கிருஷ்ணப்பா கௌதமுக்கு செலவு செய்த 9.25 கோடியே இதுவரையான அதிக செலவாக இருந்தது.
அவ்வளவு தொகை ஏலத்தில் கௌதமை சென்னை அணி பெற்றுக்கொண்டும், ஒரு போட்டியிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கவில்லை என்பது விமர்சனத்துக்குரியதே..
இந்த நிலையில் இன்றைய மெகா ஏலத்தில் சென்னை அணி 14 கோடி இந்திய ரூபாயை செலவு செய்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரை பெற்றுக்கொண்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் ஒரு வீரரை அவர்கள் இலக்கு வைத்து அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த நிகழ்வாகவும் இதுவே பார்க்கப்படுகின்றது.