IPL வரலாற்றில் புதிய சாதனையை நோக்கி நகரும் RCB வீரர் ஹர்ஷால் பட்டேல்…!

14வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி  நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் மிகச்சிறப்பாக RCB அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

இதன் மூலமாக தொடரில் 7வது வெற்றியை பெற்றுக் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், Play off செல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட மூன்றாவது அணியாக இன்று மாறியிருக்கிறது.

150 என்கின்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி 17.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடர் முழுவதுமாக ஆர்சிபி அணியின் வெற்றிகளுக்கு பிரதானமான காரணமாக இருக்கும் பந்துவீச்சாளர் ஹர்ஷால் பட்டேல் இன்று ஒரு புதிய சாதனையைப் படைத்தார்.

ஏற்கனவே இந்திய தேசிய அணிக்கு அறிமுகம் ஆகாமல், உள்ளூர் வீரர் ஒருவர் அதிகமான IPL விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனை ஆர்சிபி வீரர் சஹாலிடம் உள்ளது. 2015ஆம் ஆண்டு மொத்தம் 23 விக்கெட்டுகளை கைப்பற்றனார்.

அந்த சாதனையை இன்று ஹர்ஷால் பட்டேல் முறியடித்தார், இன்று கைப்பற்றிய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து மொத்தம் 11 போட்டிகளில் இதுவரை 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் .

ஒட்டுமொத்தமான ஐபிஎல் வரலாற்றில் ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் எனும் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸின் வீரர்  டிவைன் பிராவோ வைத்திருக்கிறார்.

2013ஆம் ஆண்டு சென்னை அணிக்காக மொத்தம் 32 விக்கெட்டுகளை கைப்பற்றினார், ஐபிஎல் வரலாற்றில் நீண்ட கால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் இப்போது ஹர்ஷால் பட்டேலுக்கு வந்திருக்கிறது.

குறிப்பாக குடிநிலை ஆட்டங்கள் இன்னும் மூன்று இருக்கின்றன, Play off சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் ஆர்சிபி அணிக்கு இருக்கின்ற நிலையில், அதிகமாக இவர்கள் எலிமினேட்டர் ஆட்டத்திலும் வெற்றி பெறிவார்களாக இருந்தால் 5 -6 ஆட்டங்களில்  விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது .

ஆகவே புதிய IPL சாதனையாளராக  வருவதற்கான வாய்ப்புகள் ஹர்ஷால் பட்டேலுக்கு பிரகாசமாக தெரிகிறது.