IPL வாழ்வை முடித்துக் கொள்ளும் இந்தியாவின் 3 சுழல் நட்சத்திரங்கள்..!

IPL வாழ்வை முடித்துக் கொள்ளும் இந்தியாவின் 3 சுழல் நட்சத்திரங்கள்..!

கடந்த இரு தினங்களாக பெங்களூரில் இடம்பெற்ற IPL போட்டிகளின் ஏலத்தின் அடிப்படையில் எல்லா அணிகளும் தமது இறுதி அணிகளை உறுதிப்படுத்தியுள்ளன.

இதிலே இந்திய கிரிக்கெட்டுக்காக மட்டுமல்லாது IPL போட்டிகளிலும் கலக்கிய 3 முக்கிய சுழல் பந்து வீச்சாளர்கள் இந்த முறையுடன் IPL வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

இதிலே ஹர்பாஜன் சிங் IPL ஏலத்துக்கு வராது முன்னதாகவே ஓய்வை அறிவித்திருந்தார், ஆயினும் மற்றைய இருவரான சாவ்லா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் IPL ஏலத்தில் அணிகளால் கவனத்தில் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

IPL வரலாற்றில் 3 வது அதிகபட்ச விக்கெட் பெறுதியான 166 விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை படைத்திருப்பவர் அமித் மிஸ்ரா.

அதேநேரம் 4 வது,5 வது அதிகபட்ச IPL விக்கெட்டுக்களை கைப்பற்றி வரலாறு படைத்துள்ள சாவ்லா (157) மற்றும் ஹர்பஜனும் (150 ) IPL வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

Previous articleசுரேஷ் ரெய்னாவை ஏன் சென்னை அணி சேர்க்கவில்லை தெரியுமா -சென்னை அணியின் CEO தெளிவான விளக்கம்..!
Next articleIPL ஏலத்தின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி அணி விபரம் முழுமையாக …!