ஐபிஎல் தொடருக்கான வங்கதேச டெஸ்டில் இருந்து வெளியேறிய தென்னாப்பிரிக்கா வீரர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்: டீன் எல்கர்
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் 2022) விளையாடுவதற்காக பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை புறக்கணித்த தேசிய வீரர்கள் குறித்த சர்ச்சையை தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர், அந்த வீரர்கள் மீண்டும் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்களா என்பது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்ததற்கு பழிவாங்க இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
முதல் டெஸ்ட் போட்டியை 220 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிறகு, போர்ட் எலிசபெத்தின் செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடந்த 2 வது டெஸ்டில் 332 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை தனதாக்கியது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் 2022) விளையாடுவதனால் ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ரஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ரம் போன்ற முதல் தேர்வு வீரர்களை தென்னாப்பிரிக்கா தவறவிட்டது.
இந்தநிலையிலேயே ஐபிஎல் காக தென்னாபிரிக்காவின் தேசிய அணியின் நடவடிக்கைகளை தவறவிட்ட வீரர்கள் மீண்டும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்களா என்பது தெரியாத விஷயம் என்கின்ற புதிய விடயத்தெ தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணித்தலைவர் டீன் எல்கர் வெளிப்படுத்தியுள்ளார்.