IPL போட்டிகளில் விளையாட ஆசைப்படுவதாக அவுஸ்திரேலியாவின் நட்சத்திர டெஸ்ட் வீரர் மார்னஸ் லாபிசேன் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்தில் குட்டி ஸ்மித் என்று அழைக்கப்படும் லாபிசேன், மிக அற்புதமான டெஸ்ட் ஆட்டக்காரராக திகழ்வதோடு டெஸ்ட் தரநிலையிலும் 3 ம் இடத்தில் காணப்படுகின்றார்.
இந்த நிலையில் IPL எனப்படும் அற்புதமான கிரிக்கெட் திருவிழாவில் விளையாட நான் ஆசைகொண்டுள்ளேன், IPL ஏலத்தில் என்னை பதிவு செய்துள்ளேன்.என்ன நடக்கிறது என்று பார்க்க ஆவலாக உள்ளேன் என்றும் மார்னஸ் லாபிசேன் தெரிவித்துள்ளார்.
லாபிசேன் அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பாஸ் லீக் BBL போட்டிகளில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக 6 போட்டிகளில் 176 ஓட்டங்களைக் குவித்ததோடு, பந்துவீச்சில் 10 விக்கெட்களையும் கைப்பற்றியவர் என்பது முக்கியமானது.