IPL ஏலத்தில் கவனத்தில் கொள்ளப்படாத முன்னணி நட்சத்திரங்கள் பட்டியல்…!
15 வது IPL தொடருக்கான இன்றைய மெகா ஏலத்தில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் பலர் ஏலத்தில் விலை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
IPL வரலாற்றில் முன்னர் அணிகளின் தலைவர்களாக இருந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் இதிலே அடங்குகின்றனர்.
10 அணிகளாலும் கவனிக்கப்படாத முன்னணி வீரர்கள் பட்டியல்.
2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதுவரை விற்கப்படாத 10 சிறந்த வீரர்களின் பட்டியல் பின்வருமாறு. அணிகளிடம் பணம் இருந்தால் நாளை இந்த வீரர்களை தேர்வு செய்யலாம்.
விற்கப்படாத வீரர்கள்
சுரேஷ் ரெய்னா (அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய்)
ஷாகிப் அல் ஹசன் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்)
ஸ்டீவன் ஸ்மித் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்)
டேவிட் மில்லர் (அடிப்படை விலை 1 கோடி ரூபாய்)
முகமது நபி (அடிப்படை விலை 1 கோடி ரூபாய்)
அமித் மிஸ்ரா (அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய்)
ஆடம் ஜம்பா (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்)
இம்ரான் தாஹிர் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்)
முஜீப் உர் ரஹ்மான் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்)
உமேஷ் யாதவ் (அடிப்படை விலை 2 கோடி ரூபாய்)