IPL ஏலம் இலங்கை வீரர்கள் ஒருவருக்கும் இடமில்லை
IPL ஏலம் சற்று முன்னர் நிறைவடைந்திருக்கிறது.
ஏலத்தில் இலங்கை வீரர்கள் 9 பேர் பங்கு கொண்டிருந்த போதிலும் ஒரு அணியும் இலங்கை வீரர்களை தமது அணிக்குள் உள்வாங்க முன்வரவில்லை.
லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் இல் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் IPL இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வீரர் கூட தற்சமயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரரான விஜயகாந்த் விஜாஸ்காந்த் IPL ஏலத்தில் இடம்பெற்றிருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் IPL ஏலத்துக்கு பதிவுசெய்த 1192 வீரர்களுக்குள் இருந்து 294 வீரர்கள் கொண்ட IPL இறுதி ஏல பட்டியலில் இடம்பெற்றமையே பெருமைப்படத்தக்கதுதான்.