IPL ஏலம் – மைம்பை இந்தியன்ஸ் அணியின் பலமும், பலவீனமும் – ஓர் அலசல்..!

Mumbai Indians team analysis

மொதல மும்பை ரசிகர்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புறன் 2019-2021 வரையில இருந்த அணி என்பது தாஜ் மஹால் மாதிரியான ஒரு பொக்கிஷம் அது கிடைக்க நம்ம தவம் பண்ணி இருக்கனும் திரும்ப அந்த மாதிரி அணி கூட ஒப்பிட்டு பார்க்க கூட கிட்டத்தட்ட 7-8 வருஷம் கடுமையா மெனக்கெடனும் அந்த processஅ தான் மும்பை நிர்வாகம் இப்ப ஆரம்பிச்சி இருக்கு

இஷான் கிஷான 15.25 கோடிக்கு எடுத்து அவன் தான் மும்பை ஓட வருங்கால கேப்டன்னு ஆணித்தரமா சொல்லிருச்சு

இந்த சீசன் ஆட மாட்டார்னு தெரிஞ்சும் எதிர்கால மும்பை அணி ஓப்பனிங் பவுலிங் காம்போக்க ஒன்றரை நாளா டீமுக்கு ஆள சேர்க்காம காத்திருந்து ஆர்ச்சர 8 கோடி ரூபாய் செலவு செஞ்சி எடுத்ததுக்கு ரொம்பவே தைரியம் வேனும்.


U-19 சென்சேஷன் Brevis எடுத்தது மற்றும் Backup option வீரர்களான மார்க்கண்டே,உனாட்கட்,மெரீட்டித் ஆகியோர குறைந்த விலையில எடுத்தது சிறப்பு

மும்பை அணி ஹர்திக் ஓட எடத்த இந்த சின்ன இடைவெளியல நிரப்ப முடியாதுனு நல்லா தெரியும் அதனால தான் அவர மாறியே பவர் ஹிட்டா இருக்க Tim Davidக்கு ஆல் அவுட்டா போனாங்க கூடவே பேக்அப்க்கு Sams எடுத்து வச்சிட்டாங்க அதே சமயம் குருனால் பாண்டியா விட்டுட்டு பேயிருக்கு Lower order இடத்த நிரப்ப TNPL அனுபவம் உடைய சஞ்சய் யாதவ எடுத்துட்டு வந்து இருக்கு மும்பை.

மீண்டும் ஒரு அனுபவமிக்க சுழல் பந்து வீச்சாளர் எடுக்காதது , இந்தியன் back பேட்டிங் strength மிகவும் குறைவாக இருப்பதும் அணிக்கு பலவீனமான தென்படுது , இந்த சீசனும் No.4 இடத்த Tilak Varma/ Brevis கைகள ஒப்படைக்குது மும்பை மத்த அணிகள் ஒட No.4 பார்க்கும் போது சற்று வலிமையில்லா தோற்றம் தருவது கவலை பட வேண்டிய விஷயம், ஆர்ச்சர் அடுத்த சீசன் தான் வராரு இந்த சீசன் பும்ரா கூட powerplayல பந்துவீச போற பவுலர் யாருனுன்ற கேள்வி குறி எழுது

ரசிகர்கள் பொறுத்தவரைக்கும் உனாட்கட், முருகன்அஷ்வின்,மில்ஸ்,மெரிட்டித்,ஆலன்,சாம்ஸ் ஆகியோர் வருகை மேல நம்பிக்கை இல்லாம இருக்காங்க காரணம் இவங்க எல்லாரும் முந்தின கால கட்டத்துல மாபெரும் தொகைக்கு ஏலம் போய் அந்த தொகைக்கு ஏற்ப perform பண்ண முடியாம போனதால ஆனா இவங்க எல்லாருமே திறமையான ஆட்கள் தான் இந்த முறை Price tag pressure இல்லாம ஆடுவதும் , இவங்களோட roles என்ன என்னனு முறைப்படுத்த நிர்வாகமும் இருப்பதுனால இவங்க performance நல்லா அமையும்னு நம்பறோம்

எதிர்காலத்த மனசுல வச்சிட்டு மட்டுமே அணிய கட்டமைச்சி வச்சிருக்குறதுனால இந்த சீசன் ஒட தேவைகள சில இடங்கள்ல சரி செய்யாம விட்டுருப்பது ஏமாற்றம் அளிப்பதுனால இந்த டீம் அடிச்சி புடிச்சி போராடி தான் playoffs தகுதி பெறும் அப்படி தகுதி ஆனா மட்டுமே மும்பை ஓட புதிய அணி கட்டமைப்பு processக்கு உத்வேகம் அளிக்கும்
#hpde