எதிர்வரும் 26-ஆம் திகதி ஆரம்பமாக உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த சீசனின் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் நான்கு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளன.
மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் (Brabourne) மைதானம், நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் வான்கடே மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தலா 20 போட்டிகளும், பிரபோர்ன் மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ) மைதானத்தில் தலா 15 போட்டிகளும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் வான்கடே மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தலா 4 போட்டிகளில் விளையாடும். மீதமுள்ள இரண்டு மைதானங்களில் தலா 3 போட்டிகளில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.