IPL தலைமைத்துவ விலகல்- காரணத்தை விளக்கிய CSK CEO காசி விஸ்வநாதன்…!

IPL தலைமைத்துவ விலகல்- காரணத்தை விளக்கிய CSK CEO காசி விஸ்வநாதன்…!

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, வரும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்தார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டரான ஜடேஜா, 2012 முதல் CSKயின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தோனி மற்றும் முன்னாள் இந்திய பேட்டர் சுரேஷ் ரெய்னாவுக்குப் பிறகு ஜடேஜா சிஎஸ்கேயின் மூன்றாவது கேப்டனாக இருப்பார்.

2008 ஆம் ஆண்டு IPL தொடர் தொடங்கியதில் இருந்து டோனி சிஎஸ்கேயை வழிநடத்தி, நான்கு ஐபிஎல் பட்டங்களுக்கு வழிகாட்டினார்.

CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், தோனி தடையற்ற தலைமை மாற்றத்தை விரும்புகிறார். “எம்எஸ் தோனி தலைமை ‘transition’ -‘மாற்றம்’ சீராக இருக்க வேண்டும் என்று விரும்பினார், மேலும் கடந்த ஆண்டு நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்ற அணிக்காக ரவீந்திர ஜடேஜா தயாராக இருப்பதாக உணர்ந்தார்” அதனாலேயே தலைமையில் இருந்து விளக்க தீர்மானித்ததாக விஸ்வநாதன் கூறினார்.