IPL பாணியில் அதிரடி நிகழ்த்தி நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து..!

ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

ஜானி பேர்ஸ்டோவ் (136) மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (75) ஆகியோரது அதிரடி கைகொடுக்க நாட்டிங்ஹாம் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

72 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6.00 எனும் வேகத்தில் இலக்கை எட்டியது.

நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 553 ரன்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 299 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டத்தின் இறுதி நாளான நேற்று (14) தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்திருந்ததுடன், கடைசி இரண்டு மணி நேரத்தில் 160 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் அந்த காலக்கட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், நியூசிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்திருக்கும்.

ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஜானி பேர்ஸ்டோவின் அதிரடியில் இங்கிலாந்து 92 பந்துகளில் 136 ரன்கள் விளாச இலக்கு இலகுவானது, 2 மணிநேரம் நீடித்த பேர்ஸ்டோவின் 92 பந்து இன்னிங்ஸில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

பேர்ஸ்டோவ், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்து நியூசிலாந்தை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து கைப்பற்றியது.

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் – 553/10
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் – 539/10
நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 284/10
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 299/5

YouTube காணொளிகளுக்கு ?

கவாஸ்கரை பின்தள்ளிய ரூட் ?