இலங்கை டி20 அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என அறியவருகின்றது.
10.75 கோடிக்கு (SRI 39 கோடி) வனிந்துவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியிருந்தாலும், பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தொடங்கும் உலகக் கோப்பைக்கு முன் இந்த காயம் குணமாக வேண்டும் என்பதால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பரிந்துரையின்படி துபாய் சென்று சிறப்பு மருத்துவரை சந்திக்க உள்ளார்.
காயம் குணமடைய சிறிது காலம் எடுக்கும் என்பதால், அவரை புனர்வாழ்வு நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் மருத்துவர்கள் கருதுகின்றனர்.