IPL ல் எந்த அணியில் ஹசரங்க இணைவார் -முரளிதரன் கருத்து…!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளராக வளர்ந்துவரும் சகலதுறை வீரர் ஹசரங்க தொடர்பில் அண்மைக் காலமாக அதிகமான ரசிகர்களது பார்வை திரும்பியிருக்கின்றது.
வெகுவிரைவில் ஏதோவொரு IPL அணியில் ஹசரங்கவை காணலாம் எனும் எதிர்பார்ப்பும் ரசிகர்களை தொற்றிக்கொண்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் வீரரும் சான் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகருமான முரளிதரன் கருத்துக் பகிர்ந்துள்ளார்.
உண்மையில், ஹசரங்க சமீபத்தில் இலங்கை அணியில் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் நிறைய ரன்களைக் கொடுக்காமல் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்பதை நிரூபித்து வருகின்றார்.
இதன் காரணமாக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்திய பிரீமியர் லீக் (IPL) உரிமையாளர்கள் அடுத்த ஆண்டு ஏலத்தில் ஹசரங்கா தொடர்பில் கவனம் செல்ல வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். இருப்பினும், ஹசரங்கவுக்கு ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருக்கும், ஏனெனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடும் அணியில் பங்கேற்க முடியும்.
ஐபிஎல் உரிமையாளர்கள் அவரைப் பின்தொடர வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், உள்ளூர் வீரர் என்றால் சிக்கல் இருக்காது. ஆனால் அது ஒரு வெளிநாட்டு வீரர் என்றால், எந்தவொரு உரிமையாளரும் ஒரு வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளரை விரும்புகிறாரா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரமான விஷயம். அவர்கள் ஹசரங்கவை ஏலத்தில் வாங்குவர், ஆனால் அவரை விளையாட வைப்பது உரிமையாளருக்கு எளிதாக இருக்காது. ஏனென்றால் சில உரிமையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களைக் காட்டிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களைப் விரும்புகிறார்கள், ”என்று முரளிதரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
IPL 2022 இல் 10 அணிகள் கொண்ட தொடராக மாற்றியுள்ளதால், அடுத்த சீசனில் இரண்டு புதிய உரிமையாளர்கள் முன்னணியில் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அதிக வீரர்கள் IPL அணிகளில் இடம்பெறுவார்கள் என்பதும், ஹசரங்கவுக்கு ஒப்பந்தம் கிடைக்குமா இல்லையா என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும் இருக்கும் எனவும் முரளி தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும் ஹசரங்கவை நாம் விரைவில் ஏதோவொரு IPL அணியில் காணலாம் எனும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.