IPL ல் பயிற்சியாளராகும் குளூஸ்னர்..!

2024 ஐபிஎல் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA20 போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார். இரண்டு குழுக்களும் RPSG குழுமத்திற்கு சொந்தமானவை.

லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர், உதவிப் பயிற்சியாளராக எஸ் ஸ்ரீராம் உள்ளனர்.

லான்ஸ் க்ளூஸ்னர் ஐபிஎல்-ல் பயிற்சியாளராக இணைவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.

க்ளூஸ்னரின் பயிற்சியின் கீழ், கயானா அமேசான் வாரியர்ஸ் கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் (CPL) சாம்பியன்ஷிப்பை வென்றது.