IPL வரலாற்றில் மோசமான சாதனை -சிராஜ் , ஹசரங்க வசம்…!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனில் அதிக சிக்ஸர்களை வழங்கியவர என்ற பிரபலமற்ற சாதனையை பதிவு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 மோதலின் போது, ​ வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், சிராஜ் இந்த தேவையற்ற சாதனையை எட்டினார்,

அங்கு அவர் இரண்டு ஓவர்களில் மூன்று சிக்ஸர்களை வழங்கி 31 ரன்களுடன் தனது விக்கெட் இல்லாத ஸ்பெல்லை முடித்தார்.

இந்த சீசனில் மோகமத் சிராஜ் மொத்தமாக 31 சிக்சர்களை வழங்கியுள்ளார், 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகலதுறை வீரர் பிராவோ 28 சிக்சர்களை வழங்கியமையே இதுவரையான சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை இந்தாண்டு சிராஜ் முறியடித்துள்ளார், இந்த ஆண்டுகளில் மொத்தம் 15 ஆட்டங்களில் விளையாடி 514 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

முன்னதாக ஆர்சிபி அணி இவரை 7 கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது .

சிராஜுக்கு அடுத்த நிலையில் ஹசரங்க 30 சிக்சர்களையும்,  சஹால் இந்த ஆண்டில் 27 சிக்சர்களையும் விட்டுக்கொடுத்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

YouTube link ?