IPL 2022: டெல்லி கேப்பிடல்ஸ் ஒட்டுமொத்த அணியும் தனிமையில் – 3 பேருக்கு கொரோனா-

IPL 2022: டெல்லி கேப்பிடல்ஸ் ஒட்டுமொத்த அணியும் தனிமையில் – 3 பேருக்கு கொரோனா-

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அயல்நாட்டு வீரர் ஒருவர் உட்பட மூன்று பேருக்கு கோவிட்-10 பாசிட்டிவ் என்று உறுதியாகியுள்ளது. இன்னொருவர் அணியின் உடற்பயிற்சியாளர் பாட்ரிக் ஃபர்ஹாட் இவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் தோல்வியடைந்த பிறகு, கேபிடல்ஸ் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் எதிரணியினருடன் கைகுலுக்கவில்லை, ஏனெனில் சமூக-இடைவெளியைப் பராமரிக்க ஐபிஎல் அவர்களைக் கேட்டுக் கொண்டது.

புதன்கிழமை MCA ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக திங்களன்று மும்பையிலிருந்து புனேவுக்குச் செல்லவிருந்தது. இப்போது ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் புனே ட்ரிப் கேன்சல், இதனால் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டமும் கேன்சலாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Cricbuzz இன் அறிக்கையின்படி, டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள் தங்களுடைய அறைகளில் இருக்கிறார்கள். இந்நிலையில் அறைக்கு அறை கோவிட் சோதனைகள் இன்றும் நாளையும் செய்யப்படும். பாதிக்கப்பட்ட வீரர் ரேபிட் ஆன்டிஜென் சோதனையின் போது பாசிட்டிவ் என்று சோதிக்கப்பட்டார் மேலும் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

ஐபிஎல் 2022 புள்ளிகள் பட்டியலில் தற்போது எட்டாவது இடத்தில் இருக்கும் DC, அடுத்ததாக மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை (PBKS) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் ஏப்ரல் 20-ம் தேதி எதிர்கொள்கிறது.

#Abdh