IPL 2024 பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

20 புள்ளிகளுடன் கொல்கத்தா அணியும், 17 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 17 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 14 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் முதல் ஆட்டம் ஆமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது.

இரண்டாவது பிளேஆஃப் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை மறுநாள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

 

Previous articleஎங்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருந்தது தெரியுமா? ருதுராஜ் வேதனை
Next articleLPL 2024 வீரர்கள் ஏலம் இன்று …!