IPL CSK vs MI – இரு அணிகளும் மோதியதில் அதிக முறை வென்றது யார்?
ஐபிஎல் என்றாலே ரசிகர்களுக்கு மனதில் தோன்றுவது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான சார்பட்டா பரம்பரை மோதல் தான். இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய சக்திகளாக திகழ்கின்றன. மேலும் இவை ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும்போது, அது ஒரு கிரிக்கெட் பண்டிகையாகவே மாறிவிடுகிறது.
இரு அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. ஆனால் அவற்றின் நேருக்கு நேர் சந்திப்புகள் எல்கிளாசிகோ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையே யார் அதிக வெற்றி பெற்றுள்ளார்கள், அதிகபட்ச ஸ்கோர் என்ன என்ற புள்ளி விவரங்களை பார்க்கலாம்.
நேருக்கு நேர் மோதல் புள்ளிவிவரம்: 2025 சீசன் வரை, சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகள் ஐபிஎல் தொடரில் 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 20 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த எண்ணிக்கை மும்பையின் மேலாதிக்கத்தை காட்டினாலும், சிஎஸ்கே அணியும் முக்கியமான தருணங்களில் தங்கள் பலத்தை நிரூபித்துள்ளது. குறிப்பாக, இறுதிப்போட்டிகளில் இவ்விரு அணிகள் மோதியபோது, சிஎஸ்கே 2010 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது, ஆனால் 2019 இல் மும்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில், இரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியிலேயே மோதுவதால், அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு இருப்பது, அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
CSK மற்றும் MI எத்தனை முறை மோதின?
2025 சீசன் வரை, CSK மற்றும் MI 36 முறை மோதி உள்ளன, இதில் MI 20 போட்டிகளில் வென்றது மற்றும் CSK 16 போட்டிகளில் வென்றது.
CSK மற்றும் MI இடையேயான சில நினைவுக்குரிய போட்டிகள் யாவை?
2015 இல் CSK 235 ரன்கள் எடுத்து டுவைன் ஸ்மித்தின் தலைமையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நினைவுக்குரிய போட்டியாகும், அதே நேரத்தில் 2018 இல் MI 223 ரன்கள் எடுத்து CSK க்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
CSK மற்றும் MI தங்களது மோதல்களில் பதிவு செய்த மிகக் குறைந்த ஸ்கோர்கள் என்ன?
2013 இல் CSK 79 ரன்கள் மட்டுமே எடுத்து MI க்கு எதிராக மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது, அதே நேரத்தில் 2018 இல் MI 87 ரன்களில் அனைவரும் அவுட் ஆகி மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தனர்.







